×

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னை: செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 4-ந் தேதி மிக்ஜாம் புயல் மழை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதிலிருந்து மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை 7.39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேபோன்று செங்கல்பட்டு பகுதி மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியிலும் இருமுறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி சுற்றுவட்டார இடங்களில் காலை 7.35 மணி மற்றும் 7.42 மணி அளவில் இருமுறை நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதே சமயம் தற்போது கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா என்ற இடத்தில் இன்று காலை 6.52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.

The post செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவு.. அதிர்ச்சியில் மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Indian Geological Survey Centre ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...